பொறுமையின் உருவம் பூமித்தாய்,
அமைதியாய் அனைத்தும் தாங்குவாள்.
சிறு பிழை செய்தால் பொறுப்பாள்,
சீரழித்தால் செடிகள் வாடும்,
நீர்நிலைகள் விஷமாகும்.
காற்று மாசுபடும் கொடுமையால்,
மனிதன் மூச்சடைத்து மடிவான்.
அமைதி காத்தாள் நெடுங்காலம்,
அன்போடு அரவணைத்தாள் உயிர்க்குலம்.
குலைத்தால் சமநிலை தன்னையே,
கொடுந்தாக்குதல் செய்திடுவாள் பின்னே.
எச்சரிக்கை இல்லா திருத்தமது,
இயற்கையின் நியதி இதுவென்றுணர்.
அன்போடு பேணுவோம் புவியினை,
அப்போது வாழ்வோம் நலமுடனே.
Comments
Post a Comment