வறுமையிலும் கல்வி
வெல்லும் என்பதற்க்கு சாட்சி.
பசியின் கொடுமையைப்
பொருட்படுத்தவில்லை அவள்.
கல்வியின் ஒளியை
நாடி நடந்தாள் அவள்.
தூரத்தில் தெரியும்
பள்ளியின் கூரை.
அவள் மனதில்
ஆயிரம் ஆசை துளிரும்.
புத்தகப்பை தோளில்,
புது நம்பிக்கையோடு.
வறுமையின் கோடுகள்
மங்கி மறையும்.
கற்க கற்க அவள்
உலகம் விரியும்.
ஏழ்மையின் விலங்கை
வெற்றி கொள்வாள் அவள்.
அவள் ஒரு நம்பிக்கை,
அவள் ஒரு ஒளி.
வறுமையிலும் கல்வி
வெல்லும் என்பதற்க்கு சாட்சி.
Comments
Post a Comment